நீ
பிறக்கவுமில்லை
இறப்பதுமில்லை
சும்மா பூமிக்கு ஒரு விசிட் வந்திருக்கிறாய்
பூமியெங்கும் பூக்கள் இரட்டிப்பாய் பூத்திருக்கின்றன
உன்னை வரவேற்க
வந்த இடத்தில்
இன்று நீ
என்னுடயதாய்
நான் உனக்குமாய்
மேலும் கீழுமாய்
முன்னும் பின்னுமாய்
அம்மாவிற்கு ஆதாரமாய்
உற்றார்க்கு சந்தோஷமாய்
பின்னாளில் நீ
பெண்னாய், மனைவியாய், தாயாய்
நீ செய்யப்போகும் தொழிலோ,
கலையோ சார்ந்த
ஒரு நபராய்
மற்றும் பலவுமாய் அறியப்படுவாய்
………….
…………..
நான் எபோதும் நீ
நல்ல மனுஷியாய்,
நீ நீயாய்
இருப்பதயே, அறியப்படுவதயே
விரும்புகிறேன்
………
…………
போகும் இடத்தில்
நீயோ நானோ இருக்கப்போவதில்லை
இரண்டு ஆத்மாக்கள்
நேருக்கு நேர், சம தளத்தில்
சந்தித்துக்கொள்ளலாம்
அதுவும் தற்ச்செயலாக
பிறகு மீன்டும் விசிட் போகலாம்
யாருக்குத்தெரியும்
பின்னூட்டமொன்றை இடுக