என்னைப்ப‌ற்றி

ஜேசு சுந்தரமாறன்என்னைப்ப‌ற்றி நானே எப்ப‌டி சொல்ற‌துன்னு எல்லாரும் சொல்ற‌மாதிரி நான் சொல்ல‌ மாட்டேன் கார‌ண‌ம் நானே என்ன‌ப்ப‌ற்றி சொல்லாட்டா வேற‌யாரு சொல்ற‌து? ஆமா இப்ப‌ நான் என்னைப்ப‌ற்றி என்ன‌த்த‌ சொல்ற‌து? ம்ம் முய‌ற்சி செய்துதான் பாத்துடுவோம். என்னை என‌க்கு ந‌ல்லாத் தெரியும் என்றுதான் நினைத்திருந்தேன் ஆனா இப்ப எழுத‌ ஆர‌ம்பித‌தும்தான் புரியுது இன்னும் ச‌ரியா தெரிய‌வில்லை (ச்சே புதுசா எதாவ‌து சொல்ல‌ன‌ம்னு நினைத்து இப்ப‌டி ஆயிடுத்தே) என்று அத‌னால‌ நீங்க‌ இன்னும் சிறிது கால‌ம் க‌ழித்து வ‌ந்து இந்த‌ பக்க‌ம் வ‌ந்தால் ஒருவேளை என்னைப்ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ வாய்ப்பு உண்டு (டாய் இப்ப‌வே தெரிந்து விட்ட‌து). ஆனாலும் என்னைப்ப‌ற்றி தெரிந்த‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளை உங்க‌ளுக்கு சொல்கிறேன்….  

  • பெய‌ர்: ஜேசு சுந்தரமாறன் (சுந்தர், வீட்டிலே அழைக்கும் பெய‌ர்)
  • ஊர்:   வாழும் ஊரை சொல்ல‌வா? இல்லை பிற‌ந்த‌ ஊரை சொல்ல‌வா? எது எப்ப‌டியென்றாலும் ஊர், நாடு இவையெல்லாம் ந‌ம்ம‌க்கு நாமே க‌ற்பித்து கொண்ட‌ விஷ‌ய‌ங்க‌ளாய் இருக்கிற‌து மேலும் இவை யாவும் மாற்ற‌த்திற்குட்ப்ப‌ட்ட‌வை என‌வே இதை எப்ப‌டி சொல்வ‌து என்று என‌க்கு தெரிய‌வில்லை …உங்க‌ளுக்கு தெரிந்தால் சொல்லுங்க‌ள் …
  • நாடு: மேலே சொல்ல‌ப்ப‌ட்ட‌துதான் இதுக்கும்
  • ம‌த‌ம்: இப்பொழுது உண்மையிலே குழ‌ப்த்தில் இருக்கிறேன்.
  • எழுதுவ‌து: ந‌ம்முட‌ய‌ குடும்ப‌ம் வாத்தியார் குடும்ப‌ம் அத‌னால‌ அடுத்த‌வ‌ங்க‌ளுக்கு எதாவ‌து ந‌மக்கு தெரிந்த‌ விஷ‌ய‌ங்க‌ளை சொல்ல‌னும்னு ஆசை ஆனா அதை ச‌ரியான‌ எழுத்துல‌ சொல்ல‌ நான் இன்னும் க‌ற்றுக்கொள்ள வேண்டிய‌து நிறைய‌ இருக்கிற‌து.

3 thoughts on “என்னைப்ப‌ற்றி

Add yours

  1. இன்று சாரு இணையதளத்தில் சாருவிடம் தாங்கள் கேட்ட வினா சிறப்பானதாக இருந்தது. வாழ்த்துக்கள்.

  2. அம‌ர்,

    வ‌ருகையை ப‌திவு செய்த‌ முத‌ல் ந‌ப‌ர் நீங்க‌ள் தான், ம‌கிஷ்ச்சியை த‌ந்த‌து உங்க‌ள் வ‌ருகைப்ப‌திவு.
    ந‌ன்றி

    யாழினி சுந்த‌ர்

பின்னூட்டமொன்றை இடுக

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Up ↑